Home உலகம் டொரொன்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

டொரொன்டோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

0

கனடா(Canada) – டொரொன்டோவில் சில முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டொரொன்டோவில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில சுற்றுலா தளங்களை இன்றையதினம்(16) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, டொரொன்டோ உயிரியல் பூங்கா (Toronto Zoo) இன்றைய தினம் (Sunday)மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்படும் சுற்றுலா தளங்கள்

விலங்குகள், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறோம் என உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகமும்(Royal Ontario Museum )இன்றையதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நுழைவுச்சீட்டு கொள்வனவு செய்தவர்களுக்கு பணம் மீள அளிக்கப்படும் எனவும், ஐந்து நாட்களில் இந்தப் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஆர்ட் கேலரி ஒன்டாரியோ (Art Gallery Ontario) மற்றும் அகா கான் அருங்காட்சியகம் (Aga Khan Museum) ஆகியவை பனிப்புயல் புயல் காரணமாக இன்று திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நான்கு சுற்றுலா இடங்களும் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version