மெட்ராஸ் மேட்னி
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட் ஹீரோவாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மெட்ராஸ் மேட்னி.
இப்படத்தில் சத்யராஜ், ரோஷ்ணி ஹரிப்ரியன், ஷெல்லி கிஷோர், ஜார்ஜ் மரியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லோ பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கமலுடன் இருக்கும் தக் லைப் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா.. பார்த்திராத ஒன்று
வசூல்
இந்த நிலையில், மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 6ம் தேதி திரைக்கு வந்த இப்படம் மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக கடந்துள்ளது.
ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் மெட்ராஸ் மேட்னி படம் தமிழ்நாட்டில் மட்டுமே கடந்த மூன்று நாட்களில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ளது ஆவரேஜான வசூலாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
