Home சினிமா மறைந்த பெற்றோர்கள் மற்றும் முதல் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து… பிரபலங்களுடன் திறக்கப்பட்ட கோவில்

மறைந்த பெற்றோர்கள் மற்றும் முதல் மனைவிக்கு கோவில் கட்டிய மதுரை முத்து… பிரபலங்களுடன் திறக்கப்பட்ட கோவில்

0

மதுரை முத்து

விஜய் தொலைக்காட்சி என்று நினைத்தாலே சில பிரபலங்கள் நமக்கு முதலில் நியாபகம் வந்துவிடுவார்கள்.

அந்த பிரபலங்கள் வெளியே வந்தாலே இவர் விஜய் டிவி புரொடக்ட் என்ற தான் மக்கள் நினைப்பார்கள். அந்த லிஸ்டில் இருக்கும் பிரபலம் தான் மதுரை முத்து.

சின்னத்திரை நகைச்சுவை கலைஞரும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து செய்துள்ள ஒரு ஸ்பெஷல் விஷயம் பற்றி தான் மக்கள் இப்போது அதிகம் பேசி வருகிறார்கள்.

கோவில்

மதுரை முத்து இறந்த தனது பெற்றோர் ராமசாமி மற்றும் முத்து இருளாயிக்கும், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் தனது முதல் மனைவி லேகாவிற்கும் கோவில் கட்டி வந்தார்.

திருமங்கலம் அருகே அரசபட்டி கிராமத்தில் மறைந்த தனது பெற்றோர் மற்றும் மனைவிக்கு மார்பளவு உருவசிலை அமைத்து கோவில் ஒன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

அதிகாலையில் வழக்கம் போல் யாகங்கள் வளர்க்கப்பட்டன, இதில் பல்வேறு நகைச்சுவை பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதோடு மதுரை முத்து சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நடந்த கோவில் திறப்பு விழாவை ஒட்டி, 1000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம், கைம்பெண் மற்றும் முதியோருக்கு வேட்டி சேலை, மாணவர்களுக்கு உடைகள், நோட்டு புத்தகம், மரக்கன்றுகள் உள்ளிட்டவையும் அவர் வழங்கினார்.

NO COMMENTS

Exit mobile version