Home இலங்கை அரசியல் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமைக்கு எதிராக ரொஷான் ரணசிங்க கருத்து – செய்திகளின் தொகுப்பு

நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமைக்கு எதிராக ரொஷான் ரணசிங்க கருத்து – செய்திகளின் தொகுப்பு

0

நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றதாகவும் நாட்டுக்கு சுமையாக உள்ள இதனை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊழலற்ற அரச நிர்வாகத்தை தோற்றுவிப்பதற்காக கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரச நிர்வாகத்தை தோற்றுவித்த போதிலும் அது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, 1972ஆம் ஆண்டு நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் இந்த நாட்டிற்கு நான்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் சிறிய அரச நிர்வாக அலகினை கொண்ட இந்த நாட்டுக்கு நான்கு தேர்தல்கள்
அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

NO COMMENTS

Exit mobile version