Home இலங்கை சமூகம் மகசின் சிறைக்கைதிகளின் மனிதாபிமானம்

மகசின் சிறைக்கைதிகளின் மனிதாபிமானம்

0

கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலை கைதிகள் இன்று(06) தங்கள் மதிய உணவை டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பில் உள்ள மக்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

கைதிகளின் மதிய உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட ரூ. 400,000 மதிப்புள்ள உலர் உணவு கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

 உணவுப்பொருட்கள் கையளிப்பு

உணவுப் பொருட்கள் இன்று கொழும்பு மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

முன்னதாக வெலிக்கடை சிறைக்கைதிகளும் மட்டக்களப்பு சிறைக்கைதிகளும் தமது மதிய உணவு தயாரிப்பதற்கான உலர் உணவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images -daily mirror

NO COMMENTS

Exit mobile version