Home இலங்கை சமூகம் இரத்தினபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகா கும்பாபிஷேக தீர்த்த யாத்திரை

இரத்தினபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலய மகா கும்பாபிஷேக தீர்த்த யாத்திரை

0

Courtesy: Satheeskumar

இரத்தினபுரி நகர் ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தின சபேஷர் ஆலய மகா
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள புனித தீர்த்த யாத்திரையும்,
திருக்கலச வீதி ஊர்வலமும் கொழும்பு ஶ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

விசேட பூஜை வழிபாடுகள் 

இந்நிகழ்வு, நேற்றைய தினம் (04.06.2025) கொழும்பு ஶ்ரீ
பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து காலை 7:30 மணி அளவில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி
அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து
வைக்கப்பட்டது.

இந்த புனித தீர்த்த யாத்திரையானது, பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் இருந்து
ஆரம்பமாகி, வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயம், கொழும்பு
ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய தேவஸ்தானத்திற்கு சென்று செட்டியார் தெரு
வீதியின் ஊடாக முத்து விநாயகர் கோயில், கதிர் வேலாயுத சுவாமி கோயில், அவிசாவளை
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில், இரத்னபுரி
ஸ்ரீ மகா காளியம்மன் கோயில், தொடர்ந்து ஆலயத்தை சென்றடைந்த உடன் மகா
கும்பாபிஷேகத்தின் பூர்வாங்க கிரியை நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளது.

NO COMMENTS

Exit mobile version