Home சினிமா உண்மையை நிரூபித்து விஜய்யை வெளியே கொண்டு வந்த காவேரி.. மகாநதி சீரியல் மாஸ் புரொமோ

உண்மையை நிரூபித்து விஜய்யை வெளியே கொண்டு வந்த காவேரி.. மகாநதி சீரியல் மாஸ் புரொமோ

0

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இளசுகளின் மனதை கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

இப்போது கதைக்களத்தில் பசுபதி போட்ட திட்டம் போல அஜய் அப்பா விஜய் மீது கொலை பழி போட தற்போது இருவரும் ஜெயிலில் உள்ளார்கள்.

விஜய்யை வெளியே கொண்டு வரவே முடியாது என்ற எண்ணத்தில் பசுபதி மற்றும் ராகினி உள்ளார்கள்.

இருவரும் காவேரி ஏளனம் பேச நேற்றைய எபிசோடில் செம சண்டை நடந்தது.

விஜய்-காவேரி

இன்றைய எபிசோடில், காவேரி விஜய்யின் சித்தியிடம் உதவி கேட்கிறார், ஆனால் அவரோ மகன் உதவி செய்தால் தற்கொலை செய்துவிடுவேன் என கூறியதாக உதவ மறுக்கிறார்.

இதனால் செம பிளான் போட்ட காவேரி, வெண்ணிலாவை குழப்பி பசுபதி தான் இப்படியொரு பிளான் போட்டார் என அவரது வாயாலயே சொல்ல வைத்துவிட்டார்.

அதனை வீடியோவாக எடுத்த காவேரி போலீஸ் அதிகாரியிடம் காட்டி விஜய்யை வெளியே கொண்டு வருகிறார். இப்போது மகாநதி சீரியலின் செம அதிரடி புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version