Home சினிமா மகாராஜா 10 நாள் அதிகாரப்பூர்வ வசூல் விவரம்.. மொத்தம் இத்தனை கோடியா

மகாராஜா 10 நாள் அதிகாரப்பூர்வ வசூல் விவரம்.. மொத்தம் இத்தனை கோடியா

0

 விஜய் சேதுபதிக்கு பெரிய கம்பேக் படமாக அமைந்து இருக்கிறது சமீபத்தில் ரிலீஸ் ஆன மகாராஜா படம். மற்ற ஹீரோக்களின் படங்களில் வில்லன், கெஸ்ட் ரோல் என நடித்து வருவதால் தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் அவற்றை குறைக்கப்போகிறேன் என விஜய் சேதுபதியே கூறி இருந்தார்.

அந்த அளவுக்கு இருந்த அவரது கெரியரை தற்போது மகாராஜா படம் மூலமாக மீண்டும் தூக்கி நிறுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.

10 நாள் வசூல்

நித்திலன் இயக்கி இருந்த மகாராஜா படத்தின் 10 நாள் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

உலக அளவில் 10 நாளில் 81.8 கோடி ருபாய் வசூல் வந்திருக்கிறது என அறிவித்து இருக்கின்றனர். விரைவில் 100 கோடி ரூபாயை படம் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
 

Source: https://cineulagam.com/article/maharaja-10-days-official-boxoffice-collection-1719236781

NO COMMENTS

Exit mobile version