Home ஏனையவை வாழ்க்கைமுறை மழைக்காலத்தில் முகம் அழகா ஜொலிக்க வேண்டுமா! இதை மட்டும் செய்தால் போதும்

மழைக்காலத்தில் முகம் அழகா ஜொலிக்க வேண்டுமா! இதை மட்டும் செய்தால் போதும்

0

கோடைக்காலத்தில் சரும பிரச்சனைகளை சந்திப்பது போல மழைக்காலத்திலும் நிறைய சரும பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாக்கம், பூஞ்சை தொற்றுகள், சரும எரிச்சல், அரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மழைக்காலத்தில்  சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

அதுவும் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்றவும், பருக்களை தடுக்கவும் ஒரு சில முக கலவைகளை (பேஸ்பெக்) பயன்படுத்தலாம்.

முக அழகு

அந்தவகையில், வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு இந்த முக கலவைகளை தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

ரோஸ் வோட்டர், ஒரஞ்சு தோல் தூள், துவரம் பருப்பு தூள் மற்றும் ஓட்ஸ் தூள் என்பவற்றை கலவையாக எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

சரும பிரச்சனை

தக்காளி துண்டை எடுத்து, அதை சிறிது நேரம் ஃப்ரீசரில் உறைய வைத்து எடுக்க வேண்டும்.

பின் அதைக் கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள அமிலத்தன்மை முகத்தில் திறந்துள்ள சரும துளைகளை சுருங்கச் செய்யும்.

இப்படி தினமும் பன்படுத்தி வந்தால், சருமத் துளைகள் சுருங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version