Home இலங்கை சமூகம் வடக்கு கடற்றொழிலாளர்களின் மீன்பிடி பிரச்சினைகள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

வடக்கு கடற்றொழிலாளர்களின் மீன்பிடி பிரச்சினைகள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

0

இலங்கைக்கான (Sri Lanka) இந்திய (India) உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவை (Nandika Kumanayaka) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு கடலில் தற்போது நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் குறித்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கான ஒத்துழைப்பு

இதனடிப்படையில், இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்குமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் நீண்டகாலம் தீர்வு காணப்படாமல் இருக்கும் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாமென இரு தரப்பினரும் வலியுருத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய திட்டங்கள் 

இச்சந்திப்பில், இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய திட்டங்கள் தொடர்பிலும் மீளாய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version