Home இலங்கை அரசியல் ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு

ஒரு போதும் விலக மாட்டேன்.! மகிந்தவின் அதிரடி அறிவிப்பு

0

தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறும் போது, அரசியலை விட்டு ஒருபோதும் செல்லப்போவதில்லை என முன்னாள்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

தான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று கேட்டபோது, ​​”நான் அரசியலைத் தொடர்வேன். நான் ஒருபோதும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை” என கூறியுள்ளார்.

வெளியேறிய மகிந்த

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.  

இந்த நிலையில், அது குறித்த சட்டம் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மகிந்த கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு இன்று வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version