Home முக்கியச் செய்திகள் மீண்டும் மகிந்தவின் கைகளுக்கு விஜேராம இல்லம் – பின்னணியில் நடக்கும் இரகசிய வியூகம்

மீண்டும் மகிந்தவின் கைகளுக்கு விஜேராம இல்லம் – பின்னணியில் நடக்கும் இரகசிய வியூகம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க பல்வேறு தரப்பினரும் போட்டி போடத் தொடங்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் சில வர்த்தகப் பிரமுகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் வாடகையாக நிர்ணயிக்கப்பட்ட 45 லட்சம் ரூபா மாதாந்த வாடகை செலுத்தி விஜேராம இல்லத்தை மீண்டும் மகிந்தவுக்குப் பெற்றுக் கொடுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே போன்று சீன அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் (colombo) வீடொன்றை பரிசளிக்கவும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மொட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச நாட்டம்

பௌத்த மதத்தின் மல்வத்து பீட துணைப்பிரிவான சீயம் நிகாயவின் கோட்டே பிரிவைச் சேர்ந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றும் மகிந்தவுக்காக வீடொன்றைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கையின் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் ஒன்றிணைந்து மகிந்தவுக்காக வீடொன்றை அன்பளிப்புச் செய்வது குறித்தும் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மகாசங்கத்தினர் வழங்கும் வீடொன்றைப் பெற்றுக் கொள்வதில் மகிந்த ராஜபக்ச நாட்டம் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version