Home இலங்கை அரசியல் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள 7 இலட்ச அரச சேவையாளர்கள்!

தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ள 7 இலட்ச அரச சேவையாளர்கள்!

0

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ( Election Commission of Sri lanka) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரச சேவையாளர்கள் தகுதி

மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி, அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குறித்த 3 தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாள் கடந்த 09 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/mail-voting-approved-for-700k-govt-workers-1724129460

NO COMMENTS

Exit mobile version