Home இலங்கை சமூகம் 730 நாட்களை கடந்து மைலத்தமடு அறவழி போராட்டம் : மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள்

730 நாட்களை கடந்து மைலத்தமடு அறவழி போராட்டம் : மட்டக்களப்பில் அணிதிரண்ட மக்கள்

0

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மைலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை
பெற்றுக்கொள்ளும் அறவழிப்போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதவது
15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், தற்போது 730 வது நாளாக இன்றைய தினம்
(15.09.2025) சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றது.

 இப்போராட்டத்திற்கு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை
நிறுவக மாணவர் ஒன்றியமும் பேராதரவை வழங்கியுள்ளது.

பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்

இதன்போது போராட்டக்காரர்கள், கால்நடைகளை கொல்லாதே, அரசே வேடிக்கை
பார்க்காதே, உரிமைக்காக குரல் கொடுப்போம், இரண்டு வருடங்கள் கடந்தும்
பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுவது ஏன், பண்ணையாளர்களுக்கு நிரந்தர மேய்ச்சல் தரையை
வழங்கு, போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியவாறு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், இரா.சாணக்கியன், பிரதேச சபை
தவிசாளர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் என பலரும்; கலந்து
கொண்டிருந்தனர்.

 

NO COMMENTS

Exit mobile version