நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட பேரிடர் நிலை காரணமான தடைப்பட்டிருந்த சில பிரதான போக்குவரத்து மார்க்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இன்று போக்குவரத்து தெருக்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியாகிய அறிக்கையின்படி,
திறக்கப்பட்ட பாதைகள்
“மரதன்கடவல ஹபரன A11 வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
ஹலவத்த கொழும்பு பேருந்து சேவை வழமைக்கு.
கொழும்பு புத்தளம் பிரதான வீதி (A3) போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை – மட்டக்களப்ப வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
மேலும், குருநாகல் மட்டக்களப்பு வீதி வாகனப் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும்.
அதன்படி, கொழும்பிலிருந்து தம்புள்ளை, ஹபரண, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்புக்கு பயணிக்கலாம்” என திணைக்களம் அறிவித்துள்ளது.
