Home இலங்கை அரசியல் மைத்திரியின் அதிரடி தீர்மானம்

மைத்திரியின் அதிரடி தீர்மானம்

0

இலங்கையில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பல பெரிய சவால்கள் உள்ளதாகவும் மைத்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களுக்கு நிவாரணம்

எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதற்காக சுமார் நான்காயிரம் கோடி ரூபா செலவிட வேண்டும்.

அதற்கேற்ப மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது எனவும் முன்னாள் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

Source: https://tamilwin.com/article/maithripala-sirisena-strong-politics-decision-1727058520

NO COMMENTS

Exit mobile version