திருகோணமலையில் (Trincomalee) – மட்டக்களப்பு (Batticaloa) பிரதான வீதியில் வானும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் நேற்று (28) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் ஈச்சிலம்பற்று
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
10 பேர் படுகாயம்
இவ் விபத்தில் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வானில்
பயணித்த ஐவரும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி காரில் பயணித்த
ஐவருமாக 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.