Home இலங்கை சமூகம் தமிழர் தலைநகரில் விபத்துக்குள்ளான பேருந்து : பலர் காயம்!

தமிழர் தலைநகரில் விபத்துக்குள்ளான பேருந்து : பலர் காயம்!

0

Courtesy: Buhary Mohamed

திருகோணமலை, சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (25) காலை
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காவல்துறையினர் விசாரணை 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த 9 பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும் 3 பேர் சேருநுவர
பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version