Home இலங்கை தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்

தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா விதியில் அதிரடி மாற்றம்

0

இலங்கை கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்குத்
திட்டத்தில் தாய்லாந்து அரசு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15, 2026 முதல் இலங்கையர்கள் தாய்லாந்திற்கு
விசா இன்றி பயணம் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பயணிகள்

மேலும் செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கை பயணிகளும்
புறப்படுவதற்கு முன்பே உரிய விசாவைப் பெற வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் விசா விண்ணப்பங்களையும் அதற்கான கட்டணங்களையும் தாய்லாந்தின்
அதிகாரப்பூர்வ இணையவழி e-Visa முறைமை மூலமாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரில் சமர்ப்பிக்கப்படும் விசா
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளாது.

 விசா இரத்து

எனவே செப்டம்பர் 15-க்கு முன்னர் ஏற்கனவே உள்ள விசா விலக்கு முறையின் கீழ்
தாய்லாந்திற்குள் நுழையும் பயணிகள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் வரை
தொடர்ந்து அங்கு தங்கியிருக்க முடியும்.

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு, சுற்றுலா, பொருளாதார நலன்கள் மற்றும் பரஸ்பர
ஒத்துழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தாய்லாந்து அரச அமைச்சரவை இந்த முடிவை
எடுத்துள்ளது.

இது குறித்த “புதிய விசா நடவடிக்கைகள்” பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை
கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

Source: https://tamilwin.com/article/major-change-for-sri-lankans-traveling-to-thailand-1788742247

NO COMMENTS

Exit mobile version