Home இலங்கை அரசியல் அரசாங்கத்துக்குள் மக்கள் அறியாத பெரும் சதித்திட்டங்கள்: மகிந்த தரப்பு பரபரப்புத் தகவல்

அரசாங்கத்துக்குள் மக்கள் அறியாத பெரும் சதித்திட்டங்கள்: மகிந்த தரப்பு பரபரப்புத் தகவல்

0

மக்களுக்கு தெரியவராத பல சதித் திட்டங்கள் அரசாங்கத்தின் உள்ளே நடந்து வருவதாக மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

அது தற்போதுவெளித் தோற்றத்திற்கு தெரியவில்லை என நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

உள்வீட்டு சலசலப்புகள்

அதன்போது, அவர் மேலும் கூறியதாவது,  “மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தேசிய மக்கள் சக்தியை (NPP)யை புறந்தள்ளிவிட்ட நாட்டில் பெரும்பான்மையான ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுகிறது.

நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகளை வைத்து நோக்கினால் அரசாங்கத்தில் உள்வீட்டு சலசலப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவை காலம் செல்ல செல்ல மெதுவாக வெளிவரும்.

ஜனாதிபதி அநுரவின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.எதிரக்கட்சியில் இருக்கும் போதிருந்த உட்சாகம் குறைந்து விட்டது.சிறிது காலத்தில் அரசாங்கம் கவிழ்ந்து விடும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version