இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு தசாப்தங்களின் பின் நடவடிக்கை
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இவ்வாறு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய திருத்தப் பணிகள்
அமைச்சரவையின் அனுமதியுடன், சபாநாயகர் ஜகத் விக்ரமரதனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, நாடாளுமன்ற கட்டடத்தில் பாரிய திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
