Home இலங்கை சமூகம் வவுனியாவில் பத்தாயிரம் ஏக்கராக குறைவடைந்த பெரும்போக நெற்செய்கை

வவுனியாவில் பத்தாயிரம் ஏக்கராக குறைவடைந்த பெரும்போக நெற்செய்கை

0

வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக
நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒன்பது கமநல
அபிவிருத்தி பிரிவுகளினூடாகவும் 10 ஆயிரத்து 51ஏக்கர் காணிகளில் மாத்திரம்
நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி 

அவற்றில் மிகக்குறைவாக உலுக்குளம் பிரிவில் 30 ஏக்கர் செய்கை
பண்ணப்பட்டுள்ளதுடன் அதிகபட்சமாக ஓமந்தைபிரிவில் 2489 ஏக்கர் அளவில் நெற்செய்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முறை பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி பிந்தியமையினால் இந்தநிலமை
ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இனிவரும் நாட்களில் மழைவீழ்ச்சிக்கு
ஏற்ப 25ஆயிரத்து216 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான
வாய்ப்புக்கள் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால்
எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/major-rice-cultivation-reduced-to-10-000-acres-1732183339

NO COMMENTS

Exit mobile version