Home இலங்கை சமூகம் யாழ் – சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

யாழ் – சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

0

யாழ்ப்பாணம் தீவகத்தில் அமைந்துள்ள சாட்டி
மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழின விடுதலைக்காக உயிரிழந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழவு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்கள்
அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்ட்டிக்கப்படுவது வழமை.

உணர்வுபூர்வமான அஞ்சலி

அந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் தயாராகி வருகிறது.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி மாவீரர்
வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நிலையில் தீவகம் – சாட்டி மாவீரர் துயிலும்
இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல்
நிகழ்வுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, அகவணக்கம்
செலுத்தி, மலர்வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

தேராவில் துயிலுமில்லத்தில் அஞ்சலி

இதேவேளை மாவீரர் வாரத்தின் முதல் நாளான இன்று (21) முல்லைத்தீவு – விசுவமடுவில் உள்ள தேராவில் மாவீரர்
துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நினைவேந்தலின் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version