Home முக்கியச் செய்திகள் மிருகத்தைப் போல வீதியில் வைத்து கொலை – பறந்த மாகந்துரே மதுஷின் மனைவியின் கடிதம்

மிருகத்தைப் போல வீதியில் வைத்து கொலை – பறந்த மாகந்துரே மதுஷின் மனைவியின் கடிதம்

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையினரின் காவலில் இருந்த தமது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.  

வீதியில் வைத்துக் கொலை

சந்தேகநபருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டிருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்.

அதனைவிடுத்து, மாகந்துரே மதூஷ் மிருகத்தைப் போல வீதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே, உரிய தரப்பினரிடமிருந்து நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி காவல்துறை மா அதிபரை அணுகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் மாகந்துரே மதூஷின் மனைவி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version