Home இலங்கை பொருளாதாரம் இலங்கையை போல கடும் டொலர் நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ள மாலைத்தீவு

இலங்கையை போல கடும் டொலர் நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ள மாலைத்தீவு

0

Courtesy: Sivaa Mayuri

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச், மாலைத்தீவு, வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் போகலாம் என்று எச்சரித்ததை அடுத்து, அங்குள்ள இலங்கை வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிட்ச் மதிப்பீடுகள் மாலைத்தீவின் நீண்ட கால வெளிநாட்டு நாணயம் வழங்குபவர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘B-’ இலிருந்து ‘CCC+’ ஆகக் குறைத்துள்ளது.

மாலைத்தீவுகள் அடுத்த மாதத்திற்குள் 400 மில்லியன் அமெரிக்க டொலர் இறையாண்மைக் கடனைச் செலுத்த வேண்டும்.

கடன் நெருக்கடி

எனினும் அந்த நாடு கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்கிறது,

கடனளித்தவர்களுக்கு  திருப்பிச் செலுத்த ஆண்டுதோறும் 500 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை அந்த நாட்டுக்கு தேவைப்படுகிறது.

அதேநேரம், 2026 ஆம் ஆண்டில், அந்த நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் தொகை 1.07 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க உள்ளது.

கடந்த மே மாதத்தில் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு 492  மில்லியன் டொலர்களே இருந்தன.

Fitch Ratings,  மதிப்பீட்டின்படி, மாலைத்தீவில் $73 மில்லியன் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு உள்ளது.

இது ஒரு மாதத்துக்கான இறக்குமதிகளை ஈடுகட்டகூட போதுமானதாக இல்லை என்று Fitch ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version