Home இலங்கை குற்றம் கனடா அனுப்புவதாக மோசடி சம்பவம் – பெருந்தொகை கடவுச்சீட்டுகள் மீட்பு

கனடா அனுப்புவதாக மோசடி சம்பவம் – பெருந்தொகை கடவுச்சீட்டுகள் மீட்பு

0

கனடா (canada) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் படல்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சந்தலங்காவ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

மோசடி சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம நகருக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து சுமார் 50 கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://tamilwin.com/article/man-arrested-defrauding-money-send-canada-1713853700

NO COMMENTS

Exit mobile version