மூடப்பட்டிருந்த தொடருந்து கடவைக்கு ஊடாக பேருந்தை ஓட்டிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
சிசிடிவியில் பதிவு
ஜூலை 17 ஆம் திகதியன்று கினிகத்தேனை, லக்சபானவிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற
தனியார் பேருந்தின் ஓட்டுநரே இந்த ஒழுங்கு மீறலில் ஈடுபட்டதாக குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து, ஆபத்தான கடவையின் ஊடாக கடந்த சில வினாடிகளில் கண்டியை
நோக்கி பயணித்த தொடருந்து அந்த வழியில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் அருகிலுள்ள வியாபாரத்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில்
பதிவாகியுள்ளது,
சந்தேக நபருக்கு எதிராக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
