கண்டியில்(Kandy) நடைபெற்ற இறுதி ரந்தோலி பெரஹரவை ஆளில்லா விமானம்(Drone) மூலம் புகைப்படம் எடுத்ததற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், ரசங்க திஸாநாயக்க என்ற திருமண புகைப்படக் கலைஞர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விடயமட தொடர்பில் தெரியவருகையில், தலதா மாளிகைக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்ததைக் கண்டறிந்த இலங்கை விமானப்படை வீரர்கள், அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
கைது
பின்னர் அதன் உரிமையாளரான புகைப்பட கலைஞரையும் கைது செய்துள்ளனர்.
தலதா மாளிகைக்கு மேலே அனுமதியின்றி ஆளில்லா விமானம் போன்ற கருவிகளை பயன்படுத்துவது ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், ரந்தோலி பெரஹெராவின் மூன்றாவது நாளிலும் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியதற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தமையும் குறிப்பிடத்தக்கது.