Home இலங்கை சமூகம் யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

0

வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணியில் பல வருடங்களாக கசிப்பு தொழிலை மேற்கொண்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்போது, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த கசிப்பு வியாபாரியான நபர் ஒருவரே மருதங்கேணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

வெற்றிலைக்கேணி சுடலை அடி பகுதியில் மறைமுகமாக கசிப்பு வியாபாரம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மருதங்கேணி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்று பிற்பகல் (16.11) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version