இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏறாவூர் பொலிஸார் நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தொடருந்து மூலம் கொழும்பு நோக்கிப் பயணிப்பதற்காக ஏறாவூருக்கு வருகை தந்துள்ளார். இதன்போது அவரிடம் இருந்த கவிதைத் தொகுப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கவிதைகள் இடம்பெற்றிருப்பதை அவதானித்த நபரொருவர் அது குறித்து பொலிசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.
விசாரணைகள்
இதனையடுத்து, குறித்த நபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.