Home உலகம் மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி நடுவீதியில் இழுத்துச் சென்ற கணவன் : பதபதைக்கும் காணொளி

மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி நடுவீதியில் இழுத்துச் சென்ற கணவன் : பதபதைக்கும் காணொளி

0

மதுபோதையில் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் கட்டி கணவன் தரதரவென இழுத்துச்சென்ற பதபதைக்க வைக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான்(rajasthan) மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கிரமத்தைச் சேர்ந்த பிரேமராம் (வயது 32). மதுபோதைக்கு அடிமையான நிலையில் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்ற கணவன்

இந்நிலையில், மதுபோதையில் இருந்த பிரேமராம் தனது மனைவியை மீண்டும் தாக்கியுள்ளார். பின்னர், தனது மோட்டார் சைக்கிளில் மனைவியின் கைகளை கட்டிய பிரேமராம் தரதரவென இழுத்துச்சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் இது தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த காணொளியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேமராமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/man-arrested-for-tying-wife-to-motorcycle-1723540081

NO COMMENTS

Exit mobile version