Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கிளிநொச்சியில் அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

0

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு
பகுதிகளில் அனுமதி இன்றி  மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக
நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கல்லாறு பகுதியில்
பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மணலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை

அத்தோடு, அதே பகுதியில்
இருந்து அனுமதி பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்கள் நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version