Home இலங்கை குற்றம் அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

அம்பாறையில் கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

0

அம்பாறையில் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (3) இரவு கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில்
இடம்பெற்றுள்ளது. 

நீதிமன்றில் முன்னிலை 

இதன்போது, கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக
நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி பகுதியில் அண்மைக்காலமாக கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு
வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு
பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைதான சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா
கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர், சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைபடுத்தப்படவுள்ளார். 

Source: https://tamilwin.com/article/man-arrested-with-kerala-kancha-in-ampara-1738657074

NO COMMENTS

Exit mobile version