Home இலங்கை குற்றம் ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று (17) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நோன்பு முடிப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை உணவகம் ஒன்றிற்கு சென்று மேசை ஒன்றில் இருந்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

வாய்த்தர்க்கம் 

இந்த நிலையில் அங்கு சாப்பிடுவதற்காக சென்ற இளைஞனின் கால்
சாப்பிட்டுக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மேசைக்காலில்
தட்டுப்பட்டதையடுத்து மேசையில் இருந்த தண்ணீர் குவளை சரிந்து வீழந்துள்ளது.

இதனையடுத்து தெரியாமல் தட்டுப்பட்டு விட்டது என பொலிஸாரிடம் மன்னிப்பு கோரிய
நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் மட்டு.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.

விளக்கமறியல் 

இதனை தொடர்ந்து பொலிஸாரை தாக்கிய இளைஞன் ஏறாவூர் வைத்தியசாலையில்
அனுமதிக்கபட்ட நிலையில் அவரை பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக ஏறாவூர்
சுற்றுலா நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து
நீதவான் வைத்தியசாலைக்கு சென்று இளைஞனை பார்வையிட்ட பின்னர் அவரை எதிர்வரும்
27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

NO COMMENTS

Exit mobile version