Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

0

இரத்தினபுரி இறக்குவானை – ஹோரமுல பொது மயானத்தில் முச்சக்கர வண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், முச்சக்கர வண்டியுடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதிய வேளையில் நடந்த கொடூர சம்பவத்தை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபரை முச்சக்கர வண்டியின் முன் இருக்கையில் அமர வைத்து, கம்பிகளால் கட்டி, பின்னர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தெரியவந்தது.


பொலிஸார் விசாரணை

தீயில் சிக்கிய நபரின் உடல் முற்றிலுமாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்து இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version