இலங்கையில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்கு பல நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசியல் தலைவர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதாகவும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழர்களை மறந்துவிடுகின்றனர்.
இப்படியான சூழலில் இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்ந்து செல்வது அதிகரித்ததுடன் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் தமிழர்களின் பரம்பலும், வளர்ச்சியும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதேவேளை, கனடா, பிரித்தானியா போன்ற சில நாடுகள் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையில் சில விடயங்களை செய்தன.
இந்நிலையில், தற்போது புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் தமது பார்வையை திருப்பியுள்ளது.
இதற்கமைய, நோர்வேயின் ஈழத்தமிழருக்கு இராணுவப்பயிற்சி என்று இலங்கை அரசு அச்சமடைந்தமை உட்பட பல விடயங்கள் குறித்து, லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கனடா அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்…,
