மட்டக்களப்பு-வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு
பகுதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(2) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த 61 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான
மாணிக்கம் இராமலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்துக்குள் புகுந்த
காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளது.
இதனையடுத்து, அவரை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
காட்டுயானை தமது வீட்டிற்குள் வந்து அட்டகாசம் செலுத்திய வேளை தமது பிள்ளைகளை
காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளிருந்து வெளியேறிய நிலையில் அவர் இவ்வாறு
பரிதாபகரமான முறையில் காட்டுயானைத் தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளாதாக
குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
