திருகோணமல(Trincomalee) கிண்ணியா- உப்பாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (18.11.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், தாமரவில், கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த மகமூத் ஷரீப்
(65வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த வயோதிபர் குறித்த வீதியால் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி,
திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.
Source: https://tamilwin.com/article/man-dies-in-trincomalee-motorcycle-accident-1731999931
