Home உலகம் கனடா பொதுத்தேர்தலில் இடம்பெறப்போகும் சதி : அரசுக்கு சென்றது அறிக்கை

கனடா பொதுத்தேர்தலில் இடம்பெறப்போகும் சதி : அரசுக்கு சென்றது அறிக்கை

0

கனடாவில்(canada) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் (election)செல்வாக்கு செலுத்தவும், வாக்காளர்களை தவறாக வழிநடத்தவும் சீனா(china), ரஷ்யா(russia) மற்றும் ஈரான் (iran)உள்ளிட்ட பல நாடுகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக்கூடும் என்று கனேடிய சைபர் புலனாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் சைபர் புலனாய்வுப் பிரிவு, 28 பக்க அறிக்கையில், கனடாவில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்த இந்த நாடுகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளது.

சைபர் புலனாய்வுப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு செயல்பாடு குறித்து கனடாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு சைபர் புலனாய்வுப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல்

கனடாவின் லிபரல் ஆளும் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் பிரதமராகவும் சமீபத்தில் பொறுப்பேற்ற மார்க் கார்னி(Mark Carney), ஒக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் எந்த நாளிலும் பொதுத் தேர்தலை நடத்த அதிகாரம் பெற்றுள்ளதாகவும், மிகக் குறுகிய காலத்தில் அவர் பொதுத் தேர்தலை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.       

 

NO COMMENTS

Exit mobile version