Home இலங்கை சமூகம் யாழில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

0

யாழ்ப்பாணம் (Jaffna) குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச்
சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது  நேற்று (02) இடம்பெற்றுள்ளது.

குறிகட்டுவானுக்கும் மற்றும் நயினாதீவுக்கும் இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கலில்
ஈடுபட்ட படகு ஒன்று நான்கு தொழிலாளர்களுடன் நடுக்கடலில்
கவிழ்ந்துள்ளது.

காவல்துறை விசாரணை

இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்த நிலையில் அவர்கள் கரை நோக்கி நீந்திய வேளை கிராம மக்களின் உதவியுடன் மூவர்
மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஒருவர்
கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன் உயிரிழந்தவரின் சடலம் புங்குடுதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version