Home இலங்கை சமூகம் இலங்கையில் இப்படியும் மனிதர்கள்…..! வித்தியாசமான முறையில் உதவி செய்யும் நபர்

இலங்கையில் இப்படியும் மனிதர்கள்…..! வித்தியாசமான முறையில் உதவி செய்யும் நபர்

0

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் ஆலோசகராகப் பணிபுரியும் சுஜித் ஹேரத் என்பவரே இந்த மகத்தான சேவையை செய்து வருகிறார்.

வெள்ளத்தால் சேதமடைந்த பல்வேறு வகையான மின் சாதனங்களை எந்த சேவைக் கட்டணமும் வசூலிக்காமல் திருத்திக் கொடுக்கிறார்.


மின் சாதனம்

ஏதேனும் குழு அல்லது தன்னார்வ அமைப்பு முன்வந்தால், கிராமம் கிராமமாகச் சென்று மாரவில தொழிற்பயிற்சி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களின் உதவியுடன் தனது சேவைகளை வழங்க முடியும் என்று சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் வீடுகளில் உள்ள மின் சாதனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான் கற்றுக்கொண்டதைக் கொண்டு அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன்.

அதனால்தான் இந்த சேவையை வழங்க முடிவு செய்தேன். ஏற்கனவே பல்வேறு மின் சாதனங்களை தான் இலவசமாக சரி செய்து கொடுத்துள்ளதாக சுஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version