Home இலங்கை குற்றம் கும்பல் ஒன்றினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

கும்பல் ஒன்றினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

0

கம்பஹா, சீதுவ பொலிஸ் பிரிவின் எரியகஹலிந்த பகுதியில் நேற்று இரவு ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழுவொன்றினால் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


கொலை குற்றம்

கொலை செய்யப்பட்ட நபர் எரியகஹலிந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version