Home இலங்கை குற்றம் தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் – இளைஞன் படுகொலை

தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம் – இளைஞன் படுகொலை

0

களுத்துறையில் கையடக்க தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர், உயிரிழந்த இளைஞனின் உறவினர் என கூறப்படும் 17 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞன் படுகொலை

சந்தேக நபரும், உயிரிழந்தவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொலைபேசிக்காக தகராறு

இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்த போது, ​​அங்கு ஓடி வந்த வயல் உரிமையாளர், சந்தேக நபரை தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியை பறித்து சென்றுள்ளார். 

இதேவேளை, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version