Home இலங்கை சமூகம் வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

வயலுக்கு சென்று வீடு திரும்பாத கணவனை தேடி சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

Courtesy: Thevanathan

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் வயலிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் வயலுக்கு சென்ற நிலையில், மறுநாளான நேற்று(25.01.2025) வரை திரும்பி வராததால், அவரின் மனைவி அவரை தேடி வயலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து, அவர் வயலில் இறந்த நிலையில்
சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இறந்தவர் 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, இறந்தவரின் சடலம்
பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version