Home இலங்கை சமூகம் கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட அனர்த்தம் – பயணியால் தவிர்க்கப்பட்ட ஆபத்து

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் ஏற்பட்ட அனர்த்தம் – பயணியால் தவிர்க்கப்பட்ட ஆபத்து

0

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி சென்ற டிக்கிரி மெனிகே ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ரயிலின் பின்புற எஞ்சின், பிலிமத்தலாவை மற்றும் பேராதெனிய சந்தி ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று மாலை கழன்று பிரிந்து சென்றுள்ளது.

இதனை பயணி ஒருவர் கவனித்தமையினால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 அவசர சங்கிலி

இரண்டு S.12 வகை ரயில் எஞ்சின்களால் இயக்கப்படும் டிக்கிரி மெனிகே எக்ஸ்பிரஸ், மதியம் 12.40 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ​​

பின்புற இயந்திரம் திடீரென ரயிலில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. அந்த நேரத்தில், பின்புற எஞ்சின் இல்லாமல் ரயில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்ததனை அவதானித்த பயணி ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் ரயில் சுமார் 30 அடி முன்னோக்கி நகர்ந்து சென்று நின்றது. அப்போது ரயிலில் இருந்து பிரிந்த பின்புற எஞ்சின், நிறுத்தப்பட்ட ரயிலுக்கு அருகில் மீண்டும் சென்று இணைந்து கொண்டது.

NO COMMENTS

Exit mobile version