Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்கு சென்றவரை காணவில்லை!

0

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம்
பகுதியில் கடற்றொழிலுக்கு சென்ற நபர் இன்னும்
கரைக்குத் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று(27) இரவு 8:30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பவில்லை.

23 அகவையுடைய வர்ணகுலசூரிய நெகித் ரவிஷா பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, இந்த நபரின் உறவினர்களால் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் இன்று(28) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர் கடற்றொழிலுக்கு சென்ற OFRP/A/5286/PTM என்ற எண்ணைக் கொண்ட படகு
நாயாறு முகத்துவாரத்தின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கடற்றொழிலாளர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version