Home இலங்கை குற்றம் புதுக்குடியிருப்பில் சட்டவிரோத இறைச்சியுடன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத இறைச்சியுடன் ஒருவர் கைது

0

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி பகுதியில் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(15) புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில் கைவேலி பகுதியில் விஷேட சோதனை நடாத்தப்பட்டது.

கைது

இதன்போது, 3 கிலோ
கிராம் மான் இறைச்சி உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைவேலி பகுதியினை
சேர்ந்த 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நாளையதினம்(16) முல்லைத்தீவு
நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version