Home இலங்கை சமூகம் தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வெளியான தகவல்

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வெளியான தகவல்

0

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியரும்..

தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி உத்தரவிட்டது.

அந்த உத்தரவின்படி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version