Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷாவில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்கள்

றீ(ச்)ஷாவில் காய்த்துக் குலுங்கும் மாம்பழங்கள்

0

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தமான பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் ( ReeCha Organic Farm) தற்பொழுது இயற்கையான முறையில் மாம்பழங்கள் காய்க்க தொடங்கியுள்ளன.

அந்தவகையில், 1500 டொம் ஜெசி (Tom JC) மாமரங்கள் நடப்பட்டு முறையான பராமரிப்பு இருப்பதால் ஒவ்வொரு மரத்திலிருந்தும் 50 தொடக்கம் 65 பழங்கள் அறுவடை செய்ய முடியும்.

குறிப்பாக மரங்கள் அனைத்தும் எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை உரங்கள் மூலம் பராமரிக்கப் படுவதால் மாம்பழங்கள் இயற்கையான சுவையுடன் காணப்படுவதுடன் அவைகளின் நிறையும் 600 கிராம்களுக்கு குறையாமல் காணப்படுகின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழுள்ள காணொளியில்…

https://www.youtube.com/embed/4d_fEDa6U0M

NO COMMENTS

Exit mobile version