Home இலங்கை சமூகம் மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் முரண்நிலை.. ஆத்திரமடைந்த தவிசாளர்

மானிப்பாய் பிரதேச சபை அமர்வில் முரண்நிலை.. ஆத்திரமடைந்த தவிசாளர்

0

யாழ். மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் தவிசாளர் ஜெசீதன்
தலைமையில் நடைபெற்றது.

அமர்வில், மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சந்தைகளின் அபிவிருத்தி
தொடர்பாக விவாதம் எழுந்தது.

இதன்போது உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சபை தவிசாளரின் கட்டுப்பாட்டை மீறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான முறை..  

இந்நிலையில் திடீரென கோபமடைந்த தவிசாளர், இனி சபையை கடுமையாக நடாத்த வேண்டிய
தேவை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், கதைப்பதற்கு இனி அனுமதி தர முடியாது எனவும் திருப்பி எதிர்த்து
கதைக்காதீர்கள் எனவும் உறுப்பினர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. 

இதன்போது உறுப்பினர்கள், எமக்கு கதைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கதைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என நீங்கள் கூற முடியாது என்ற நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version